×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சபரிமலையில் புனிதத்தை கேள்விக்குறியாக்கிய 62 வயது முதியவர்; 9 வயது சிறுமி பலாத்கார முயற்சி.!

சபரிமலையில் 62 வயது முதியவரால் 9 வயது சிறுமி பலாத்கார முயற்சி: மாலை அணிவித்து வந்து... அதிர்ச்சி சம்பவம்.!

Advertisement

 

தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் பலரும், மாலை அணிவித்து, விரதம் இருந்து கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நடப்பு ஆண்டுக்கான ஐயப்ப சீசன் தொடங்கி, பல பக்தர்கள் சபரிமலை சென்று வருகின்றனர்.

கொளத்தூர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி, தனது தந்தையுடன் சபரிமலை சென்றுள்ளார். இவர்களுடன் 62 வயது நபரான சுப்பிரமணியன் என்பவரும் பயணித்து இருக்கிறார். 

கடந்த டிசம்பர் 23ம் தேதி சிறுமியின் தந்தை மகளை சுப்பிரமணியனின் பராமரிப்பில் விட்டுவிட்டு, கழிவறைக்கு சென்றுள்ளார். இந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கிய சுப்பிரமணியன், சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். முயற்சி தோல்வியில் முடிந்தது. 

இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டிற்கு வந்ததும் தனக்கு நடந்ததை கூறவே, பெற்றோர் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி, சுப்பிரமணியனுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். புகாரை ஏற்ற காவல் துறையினர், கடந்த வெள்ளிக்கிழமை சுப்பிரமணியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#KERALA #Sabarimala
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story