அந்த சம்பவத்தால் உட்கார கூட இயலாமல் தவிக்கும் மாணவ - மாணவிகள் : கேரளாவில் இப்படியொரு சத்தியசோதனை.!
அந்த சம்பவத்தால் உட்கார கூட இயலாமல் தவிக்கும் மாணவ - மாணவிகள் : கேரளாவில் இப்படியொரு சத்தியசோதனை.!
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் மாணவ - மாணவிகள், தங்களின் கல்லூரி அருகே இருக்கும் ஸ்ரீகார்யம் பேருந்து நிறுத்தம் மூலமாக பயணம் செய்வது வழக்கம். பேருந்து நிறுத்தத்தில் இருபாலரும் ஒன்றாக அமர்ந்து அரட்டையடிப்பதும் இயல்பு.
இந்த நிலையில், கடந்த ஜூலையில் பேருந்து நிறுத்தத்தில் இருந்த இரும்பு பெஞ்ச் துண்டாக வெட்டப்பட்டு மூன்று நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்துள்ளது. இதனால் இருவர் அருகருகே உட்கார இயலாத சூழல் உருவாகவே, இருபாலரும் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து பேசுவது பிடிக்காத நபர்களால் இது செய்யப்பட்டு இருக்கும் என்றும் கூறப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்த மாணவ - மாணவிகள் இருவரும் ஒருவர் மடியில் இருப்பதை போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். இந்த விஷயம் சர்ச்சையாக மேயர் ஆர்யா ராஜேந்திரன் பார்வையிட்டு, பாலின வேறுபாடு இல்லாத புதிய பேருந்து நிறுத்தம் கட்டி தரப்படும் என்று தெரிவித்து இருந்தார். அதற்கான பணிகள் தொடங்கி பேருந்து நிறுத்தம் அகற்றப்பட்டுள்ளது. விரைவில் புதிய பேருந்து நிறுத்தம் அமைக்கப்படும்.