6 பழங்குடியின சிறுமிகள் பாலியல் பலாத்காரத்தால் தற்கொலை.. கேரளாவில் நடந்த பேரதிர்ச்சி சம்பவம் அம்பலம்.!
6 பழங்குடியின சிறுமிகள் பாலியல் பலாத்காரத்தால் தற்கொலை.. கேரளாவில் நடந்த பேரதிர்ச்சி சம்பவம் அம்பலம்.!
கேரளாவில் பாலியல் பலாத்காரத்தால் 6 பழங்குடியின சிறுமிகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், 2 சிறுமிகள் மட்டும் உயிர் பிழைத்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பான அதிர்ச்சி தகவல் விசாரணைக்கு பின்னர் அம்பலமாகியுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள பழங்குடியின காலனி பகுதிகளில், போதை ஆசாமிகள் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் செயல்கள் அதிகரித்து வருவதாக தெரியவருகிறது. இந்த நிலையில், தற்போது ஒரு பெரும் துயர சம்பவம் நடந்தது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளன.
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம், விதுரா மற்றும் பாலோடு காவல் நிலைய சரகத்தில் 192 மலைவாழ் பழங்குடியின குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதிகளில் காவல் துறையினர் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு, அங்குள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகும் சமூக விரோதிகளால், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உட்பட சட்டவிரோத செயல்கள் அதிகளவில் அரங்கேற்றப்பட்டு வருகிறது. விதுரா பகுதியை சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இதுகுறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கு உத்தரவிட்டார்.
இவர்கள் நடத்திய விசாரணையில், கடந்த 2 மாதத்தில் விதுரா, பாலோடு மண்டலத்தில் வசித்து வரும் 8 பழங்குடியின பெண்கள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். இவர்களில் 6 பேர் உயிரிழந்துவிட்டனர். 8 பேரில் 2 சிறுமிகளும் உள்ளனர். இவர்கள் அனைவருமே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியதால் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது என்பது உறுதியாகி, அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்த விஷயம் தொடர்பான முழு விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.