திடீரென வேலையை விட்டுவிட்டு சொந்த ஊர்களுக்கு புறப்படும் நர்சுகள் - கொல்கத்தாவில் நடப்பது என்ன?
kolkata private hospital nurses return to home
கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 300 க்கும் மேற்பட்ட வெளிமாநில நர்சுகள் வேலையை விட்டுவிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர், திரிபுரா, ஒடிஷா மற்றும் ஜார்கண்டை சேர்ந்த பல செவிலியர்கள் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் மருத்துவ துறையில் பணியாற்றும் பலருக்கும் அச்சமும் அதிகமான வேலை பளுவும் இருப்பது என்னமோ உண்மை தான்.
ஆனால் கொல்கத்தாவின் தனியார் மருத்துவனைகளில் பணியாற்றும் 300 க்கும் மேற்பட்ட வெளிமாநில நர்சுகள் எந்தவித காரணமும் தெரிவிக்காமல் திடீரென தங்களது வேலையை விட்டுவிட்டு சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். இதனால் கொல்கத்தாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகமானோர் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
மணிப்பூர் மாநில அரசு தங்கள் மாநிலத்தை சேர்ந்த நர்சுகள் சொந்த ஊருக்கு திரும்பினால் லாபகரமான உதவித்தொகையை வழங்குவதாக கூறி இருப்பதாகவும், அதனால் தான் பலர் தங்களது வேலைகளை விட்டுவிட்டு செல்கின்றனர் என்ற தகவல்களும் கசிந்தன. ஆனால் அதிக உதவித்தொகை தரப்படும் என மாநில அரசு கூறவில்லை. யாரும் சொந்த மாநிலத்துக்கு திரும்பும்படி நாங்கள் கேட்கவில்லை என மணியூர் மாநில முதல்வர் நோங்தாம்பம் பிரேன் சிங் கூறியுள்ளார்.
இந்நிலையில் பாதுகாப்பு கவலைகள், பெற்றோரின் அழுத்தம் ஆகியவற்றால்தான், தான் ஊருக்கு திரும்பி விட்டதாகவும், குடும்பமும், பெற்றோரும் தான் முக்கியம். எங்கள் மாநிலம் பசுமையான மாநிலம், மாநில அரசு எங்களுக்கு உதவுகிறது” என்றும் சொந்த ஊருக்கு சென்ற செவிலியர் ஒருவர் கூறியுள்ளார்.