சபரிமலைக்கு காரில் சென்ற பெண் பத்திரிகையாளருக்கு நேர்ந்த கொடூரம்; வைரலாகும் விடியோவால் பரபரப்பு!
lady reporter sent back from sabarimala video
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அக்.,17 ம் தேதி மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிய பிறகு முதல் முறையாக நடைதிறக்கப்பட்டுள்ளதால், பெண் பலரும் ஐயப்பனை தரிக்க வரலாம் என கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் நடத்தப்பட்டது.
முதல் நாளில் ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவரும், கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சன்னிதானம் நோக்கி செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் பம்பைக்கு முன்பாக நிலக்கல் பகுதியிலேயே பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர். 2வது நாளான நேற்று (அக்.,18) நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் பெண் பத்திரிக்கையாளர் சுஹாசினி என்பவர் தனது வெளிநாட்டு நண்பரும் பம்பையை கடந்து, சன்னிதானம் செல்லும் வழியில் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பப்பட்டார்.
அப்போது அங்கு நடைபெற்ற காட்சிகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.