சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்ப்பது தேச விரோத செயல் அல்ல! சட்டத்துறை அமைச்சர் பேச்சு!
law minister said checking porn videos in assembly is not against to nation
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்த நிலையில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்துள்ளது. அதிருப்தியாளர்களை சமாளிக்க, கோவிந்த கார்ஜோல், அஸ்வத் நாராயணன், லட்சுமண் சவடி ஆகி யோருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
லட்சுமண் சவடி, ஏற்கனவே கூட்டுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை நிகழ்ச்சியில் லட்சுமண், தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது. அதை அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் சி.சி. பாட்டீல் எட்டிப்பாரத்துக் கொண்டிருந்தார். இந்த விவகாரம் அப்போது சர்ச்சையை கிளப்பியதை அடுத்து அவர் பதவியை ராஜினிமா செய்தார்.
இந்தநிலையில் லட்சுமண் சவடிக்கு இப்போது அமைச்சரவையில் இடம் அளித்திருப்பதை காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்ப்பது தேச விரோத செயல் அல்ல என்று கர்நாடக மாநில சட்டத்துறை அமைச்சர் மதுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆபாச படம் பார்ப்பது தார்மீக ரீதியில் தவறானதுதான். அவர் எதிர்பாராதவிதமாக செல்போனில் அதை பார்த்தார். அதனால் அவர் அமைச்சராக இருக்கவே கூடாது என கூறுவது தவறு. ஆபாச படம் பார்ப்பது சரியில்லைதான். ஆனால் அதன் மீதான விவாதம் தேவையற்றது என கூறினார்.