#வீடியோ : ஆட்டோவில் பிரசவ வலியில் துடிதுடித்த கர்ப்பிணி பெண்!! சிறு குழந்தை செய்த நெகிழ்ச்சி சம்பவம்!! வைரல் வீடியோ இதோ..
#வீடியோ : ஆட்டோவில் பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி பெண்!சிறு குழந்தை செய்த நெகிழ்ச்சி சம்பவம்!
பழுதான ஆட்டோவில் வலியில் துடித்துக்கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணிற்கு சிறு குழந்தை ஒன்று உதவி செய்யும் வீடியோ காட்சி காண்போர் மனதை நெகிழ வைத்துள்ளது.
சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்றில் பிரசவ வலியால் கர்ப்பிணி பெண் ஒருவர் வலியால் துடிக்கிறார். அந்த ஆட்டோ ஓட்டுநர் கர்ப்பிணி பெண் துடிப்பதை பார்த்து சாலையில் மற்ற வாகனங்களிடம் உதவிகேட்டு நிற்கின்றார்.
எந்த வாகனமும் நிற்காமல் சென்ற கொண்டிருந்த நிலையில், ஒரு BMW காரும் நிற்காமல் சென்றது. பின்னர் அந்த கார் பின்னோக்கி திரும்பி வந்தது. அதில் உள்ளே இருந்த குழந்தை ஒன்று வெளியே இறங்கி வந்து ஆட்டோவில் உள்ள கர்ப்பிணி பெண் வலியால் துடித்ததை பார்த்து கர்ப்பிணி பெண்ணிற்கு தண்ணீர் கொடுத்து, அந்த குழந்தை அப்பா உதவியுடன் கர்ப்பிணி பெண்ணை காரில் ஏற்றிச் சென்ற வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த குறிப்பிட்ட வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி தரம்வீர் மீனா தனது டுவிட்டரில் பக்கத்தில் பகிர்ந்துத்துள்ளார். குழந்தையின் இந்த நெகிழவைக்கும் செயலை பலரும் பாராட்டிள்ளனர். இதோ அந்த வீடியோ காட்சி....