லிவிங் டு கெதர் சோகம்... காதலனை கொடூரமாக கொலை செய்த காதலி... வெளியான திடுக்கிடும் உண்மை.!
லிவிங் டுகெதர் சோகம்... காதலனை கொடூரமாக கொலை செய்த காதலி... வெளியான திடுக்கிடும் உண்மை.!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்த கேரளாவைச் சார்ந்த இளைஞர் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவரது காதலி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவைச் சேர்ந்த ரேணுகா என்பவர் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் வசித்து வரும் ஜாவித் என்பவரை காதலித்து வந்தார். ஜாவித் மொபைல் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் ஒன்றாக வாழ முடிவெடுத்து பெங்களூர் அக்ஷயா அடுக்குமாடி குடியிருப்பில் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்தனர்.