×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கடும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர்! ஸ்கேன் செய்த மருத்துவர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி!

lock struggle in youngman throat

Advertisement

ஜார்கண்ட், ராஞ்சியில் வசித்து வந்தவர் ஜிதேந்திர குமார். 22 வயது நிறைந்த இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டிலிருந்தவர் அவரை கவனிக்காதபோது அவர் திடீரென்று பூட்டு ஒன்றினை விழுங்கியுள்ளார். இதனால் அவருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவரது குடும்பத்தினர்கள் அவரை ராஞ்சியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் முதலில் ஜிதேந்திரகுமாரை ஸ்கேன் செய்து பார்க்கவேண்டும்,அப்போதுதான் அவர் விழுங்கிய பூட்டு எங்கே உள்ளது என்பதை நன்கு அறியமுடியும். பின்னரே அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்க முடியும் என கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஸ்கேன் செய்து பார்த்தபோது, ரிப்போர்டில் பூட்டு அவரது தொண்டையில் அடைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அது உணவு செல்லும் வழி என்பதால் அவருக்கு மூச்சு விட சிரமமாக இருந்துள்ளது.

இந்நிலையில் எண்டோஸ்கோபி மூலம் தொண்டையில் உள்ள பூட்டை வெளியே எடுத்துவிடலாம்  என்று நினைத்து மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்ட நிலையில் அது பலனளிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து திறந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்த மருத்துவர்கள் 4 மணிநேரம் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பூட்டை வெளியே எடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து அந்த நபர் தற்போது நலமாக உள்ளார். மேலும் தொடர் மருத்துவர் கண்காணிப்பில் உள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ranchi #lock #breath problem
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story