ஆசை காதல் திருமணம் பெண்ணை ஏமாற்றுக்காரிய மாற்றிய பரிதாபம்; பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து சீரழிந்த சோகம்.!
ஆசை காதல் திருமணம் பெண்ணை ஏமாற்றுக்காரிய மாற்றிய பரிதாபம்; பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து சீரழிந்த சோகம்.!
உயிருக்கு உயிராக காதலிக்கும்போது கண்ணில்லை என கூறிய காதல், திருமணத்திற்கு பின்னர் மதமாற்றம் நடவடிக்கையில் ஈடுபட்டு இறுதியில் வாழ்க்கையை இழந்து அவச்சொல்லுக்கு உள்ளாகி சிறையில் அடைக்கப்படவுள்ள துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்த டிராவல் நிறுவன உரிமையாளர் ராஜேஷ் (வயது 43). இவருக்கு கடந்த 2020 ல் லோரன் என்ற பெண்ணோடு நட்பு ஏற்பட்டுள்ளது. லோரனின் மூலம் அவரின் சகோதரியான கோவை போத்தனூரை சேர்ந்த ஹெசல் ஜேம்ஸுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர் இன்ஸ்டா, முகநூல் உட்பட சமூக வலைத்தளத்தில் மார்டன் உடை அணிந்து வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். ராஜேஷுக்கு ஜேம்ஸை பிடித்துப்போக, அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். ஜேம்ஸும் தன்னை திருமணம் ஆகாத பெண்மணி என கூறியுள்ளார்.
பின்னர், சிறிது நாட்கள் கழித்து எனக்கு திருமணம் ஆகி கணவர் இறந்துவிட்டார் என கூறியுள்ளார். அப்போதும் ராஜேஷ் பெண்ணுடன் தொடர்ந்து பேசி வர, ஜேம்ஸ் எனது கணவர் இறக்கவில்லை, கோவை நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெறுகிறது என கூறியுள்ளார்.
அடுத்தடுத்த பல தகவலால் சந்தேகம் கொள்ளாத ராஜேஷ், ஜேம்ஸின் பேச்சில் மயங்கி இருந்ததால் அவருக்கு ஆதரவாக துணை நின்றுள்ளார். இறுதியாக 2 குழந்தைகள் இருக்கிறது, எனக்கு பொருளாதார கஷ்டம் என கூறி ரூ.90 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். பின்னர், சுயதொழில் தொடங்க வேண்டும் என ராஜேஷை ஏமாற்றி ரூ.20 இலட்சம், அழகு சத்தான பொருட்கள், விலையுயர்ந்த செல்போன், கார் ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.
ஒருகட்டத்திற்கு மேல் சுதாரித்த ராஜேஷ் ஜேம்ஸுக்கு இராணுவ வீரர் ஜஸ்டின் என்பவரோடு தொடர்பு இருப்பதையும், பிற ஆண்களை ஏமாற்றிய தகவலும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அது குறித்து ராஜேஷ் கேட்டபோது தனிப்பட்ட வாழ்க்கை என பேசிய ஜேம்ஸிடம் பணத்தை கேட்டபோது, குழந்தைகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டி இருக்கிறார்.
சில மாதங்கள் விஷயத்தை கிடப்பில் போட்ட ராஜேஷ் மீண்டும் பணத்தை கேட்டபோது, ஜேம்ஸ் ரூ.2 இலட்சம் கொடுத்து ஆட்கள் வைத்து உன்னை போட்டுத்தள்ளிவிடுவேன் என மிரட்டி இருக்கிறார். இதனால் பதறிப்போன ராஜேஷ் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல பரபரப்பு தகவல் அம்பலமாகின.
காவல் அதிகாரியின் மகனை கல்லூரியின் போது காதலித்து மதத்தை கடந்து திருமணம் செய்த ஜேம்ஸுக்கு காவலரின் மகன் மூலமாக 2 குழந்தைகள் பிறந்துள்ளனர். தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், பெண் வீட்டார் காவலரின் மகனை மதமாற்ற வற்புறுத்தியுளளனர். இதனால் தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர்.
கடந்த ஆண்டு குழந்தைகளை பார்க்க சென்ற கணவரின் மீது உறவினர்கள் வைத்து தாக்குதல் நடத்திய சம்பவமும் நடந்துள்ள நிலையில், இவர்களின் விவாகரத்து வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இதற்கிடையில் தான் ராஜேஷிடம் பணம் பறித்து, இராணுவ வீரர் ஐஸ்டினை திருமணம் செய்ய ஜேம்ஸ் திட்டமிட்டு இருந்தது அம்பலமானது. இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.