வனக்காவலரை சரமாரியாக தாக்கிய பாஜக எம்.எல்.ஏ மகன்கள்.. பகீர் வீடியோ வைரல்.. மரம், மண் கடத்தலை தட்டிக்கேட்டதால் கொடூரம்.!
வனக்காவலரை சரமாரியாக தாக்கிய பாஜக எம்.எல்.ஏ மகன்கள்.. பகீர் வீடியோ வைரல்.. மரம், மண் கடத்தலை தட்டிக்கேட்டதால் கொடூரம்.!
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வனக்காவலரை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள விஜய்ப்பூர் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ சீதாராம் ஆதிவாசி. இவருக்கு தின்ராஜ், தீன்தயாள் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் வனப்பகுதியில் இருந்து மரங்கள், மண், பாறைகளை வெட்டி கடத்தும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்ததாக தெரியவருகிறது.
இதனை கவனித்த சேபூர் சரக வனத்துறை அதிகாரி ரிஷப் வர்மா, அவர்களை கண்டித்து இனியும் இதுபோன்ற நடவடிக்கையில் எடுப்பட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இந்த நிலையில், இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ மகன்கள், சம்பவத்தன்று வனத்துறை அதிகாரி 2 பேரை சிறைபிடித்து தாக்கியுள்ளனர்.
மேலும், நாங்கள் மணல், மரம் கடத்தினால் உனக்கென்ன? என்று கேட்டு அடித்து கொடுமை செய்துள்ளனர். இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது. அதனைத்தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கைது நடவடிக்கை எடுக்கப்படலாம்.