லிவின் காதலர்களுக்கு நீதிமன்றம் வைத்த ஆப்பு.. அதிரடி தீர்ப்பு!
லிவின் காதலர்களுக்கு நீதிமன்றம் வைத்த ஆப்பு.. அதிரடி தீர்ப்பு!
லிவின் உறவிலிருந்து பிரிந்தாலும் பெண் ஜீவனாம்சம் கேட்டால் அதை கண்டிப்பாக கொடுக்க வேண்டுமென மத்திய பிரதேச மாநில உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
திருமணம் செய்து கொள்ளாமலே ஒன்றாக வாழும் லிவின் கலாச்சாரம் வெளிநாடுகளில் மட்டுமே கடைப்பிடித்து வந்த நிலையில், சமீப காலமாக இந்தியாவிலும் இந்த நிலையில் கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. ஆனால், லிவின் உணவால் பல்வேறு குற்ற சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
என்னதான் இவர்கள் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும், இவர்கள் இருவருக்கும் பிடிக்கவில்லை என்றால், பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்து செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் லிவின் முறையில் வாழ்பவர்களுக்கு எந்த விதமான சட்டப்பூர்வ அங்கீகாரமும் கிடையாது.
இந்த நிலையில் லிவின் உறவு முறையில் இருந்து இருவரும் பிரியும் போது அந்த உறவில் இருந்த பெண் ஜீவனாம்சம் கேட்டால் கண்டிப்பாக உறவில் இருந்த ஆண் கொடுக்க வேண்டும் என்று மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு காதலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.