×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நாடே அதிர்ச்சி.. தலித் இளைஞரின் முகத்தில் சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர்; தேசிய பாதுகாப்பு சட்டத்தை உபயோகிக்க முதல்வர் உத்தரவு.! அதிர்ச்சி வீடியோ.!

நாடே அதிர்ச்சி.. தலித் இளைஞரின் முகத்தில் சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர்; தேசிய பாதுகாப்பு சட்டத்தை உபயோகிக்க முதல்வர் உத்தரவு.! அதிர்ச்சி வீடியோ.!

Advertisement

 

இந்தியாவில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தி (Sidhi) மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவேஷ் சுக்லா. இவர் அப்பகுதியில் பாஜக பிரமுகரான செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், இவர் இன்று தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞரின் முகத்தில் சிறுநீர் கழிக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி வைரலானது. வீடியோ வெளியான ஒருமணிநேரத்தில் காவல் துறையினரின் கவனத்திற்கும் அது சென்றது. 

மேலும், அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானுக்கும் தகவல் தெரியவரவே, குற்றவாளியை விரைந்து கைது செய்ய ஆணையிட்டவர், தேவைப்பட்டால் தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தவும் அனுமதி வழங்கியுள்ளார். 

இதனையடுத்து, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், பிரவேஷ் சுக்லாவை கைது செய்தனர்.  

ஜாதிதான் சமூகம் எனில் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் - அண்ணல் அம்பேத்கர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Madhya pradesh #India #Dalit #urine
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story