குப்புற கிடந்த இளைஞர்கள்., ஏறி மிதித்து ஓடிய பசுக்கள்., காரணம் என்ன?..!
குப்புற கிடந்த இளைஞர்கள்., ஏறி மிதித்து ஓடிய பசு., காரணம் என்ன?..!
2024ம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை, அக்.31 & நவ.1 உலகெங்கும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் அரசின் சார்பில் அனைத்து மதத்தினரும் கொண்டாடும் தீபாவளி பண்டிகையும் முன்னெடுக்கப்பட்டது.
தீபாவளி கொண்டாட்டம்
இந்து சமய நம்பிக்கைப்படி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசுரனை வென்ற நாள் தீபாவளியாகவும், வடமாநிலத்தில் ஸ்ரீ ராமர் வனவாசம் முடிந்து தனது மனைவி சீதா தேவி, தம்பி இலக்குவன் ஆகியோருடன் நாடு திரும்பிய நாள் தீபாவளியாகவும் கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க: பட்டாசு வெடித்து சிதறிய கண்ணாடி; கழுத்து அறுபட்டு சிறுவன் துள்ளத்துடிக்க மரணம்.. தீபாவளி கொண்டாட்டத்தில் சோகம்.!
மாநில அளவில் அந்தந்த மண்சார்ந்த கொண்டாட்டங்கள் தீபாவளியன்று முன்னெடுக்கப்படுகிறது. அந்த வகையில், மக்கள் தீபாவளி நன்னாளில் கோவில்களில் திரளாக திரண்டு வழிபாடு செய்தும் மகிழ்ந்தனர்.
பாரம்பரிய நிகழ்வு
இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் தீபாவளியின் இரண்டாவது நாள் கோவர்த்தன் பூஜை அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, அங்குள்ள உஜ்ஜைன் மாவட்டம், பீடத்வாத் கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி இளைஞர்களின் மீது பசு-மாடுகள் ஏறிச் செல்லும் நிகழ்வு நடைபெற்றது.
இதையும் படிங்க: தாத்தாவின் வேட்டியில் ராக்கெட் விட்ட இளைஞர்; இது தீபாவளி பரிதாபங்கள்.. வைரல் வீடியோ உள்ளே.!