×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குர்குரே கம்பெனியில், தோழனின் ஆசனவாயில் நைட்ரஜன் ஏர் செலுத்திய நட்பு.. உடல் சிதறி பலியான இளைஞர்.. அரங்கேறிய பயங்கரம்.!

குர்குரே கம்பெனியில், தோழனின் ஆசனவாயில் நைட்ரஜன் ஏர் செலுத்திய நட்பு.. உடல் சிதறி பலியான இளைஞர்.. அரங்கேறிய பயங்கரம்.!

Advertisement

நண்பனின் ஆசன வாயில் கம்பரசர் மூலமாக காற்றை செலுத்த, உடல் வெடித்து பரிதாபமாக இளைஞர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன், பண்ட்கா கிராமத்தில் குர்குரே தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் உஜ்ஜைனி கிராமத்தை சேர்ந்த கமல் சிங் ராஜ்புத் (வயது 35) மற்றும் அவரின் நண்பர் பாரத் சவுகான் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். 

கடந்த பிப். 16 ஆம் தேதி நண்பர்கள் இருவரும் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட தயாராகியுள்ளனர். அப்போது, ஆடையில் இருந்த தூசியை ஏர் கம்ப்ரஸர் மூலமாக வெளியேற்றி இருக்கின்றனர். இதன்போது, பாரத் சவுகான் திடீரென தனது நண்பர் கமல் சிங்கின் ஆசன வாயில் காற்றை செலுத்தி இருக்கிறார். 

இதனால் அவர் மூர்ச்சையாகி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், பதறிப்போன பாரத் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இவர்கள் வேலையை இரவு முடித்துவிட்ட நிலையில், அடுத்த 3 நாட்கள் விடுமுறை என்பதால், உயிரிழப்பு விவகாரம் எதுவும் தெரியவில்லை. 

குடும்பத்தினரும் கமல் சிங்கை தேடாத நிலையில், 3 நாட்கள் கழித்து தொழிலாளர்கள் வந்து பார்த்தபோது கமல் சிங்கின் உடல் இருந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தினர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் மலக்குடல் வழியே காற்றை செலுத்தியதால் கமல் சிங் இறந்தது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, கமல் சிங்கை யார் கொலை செய்தார்கள்? என்ற விசாரணையை தொடங்கியபோது, பாரத் சவுகான் சந்தேகத்திற்கு இடமான வகையில் தலைமறைவாகியுள்ளார். இதனால் அவரை காவல் துறையினர் தேடி வந்தனர். 

கடந்த சனிக்கிழமை மாலையில் பாரத் சவுகான் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் நடந்த விசாரணையில் மேற்கூறிய சம்பவம் அம்பலமாகியுள்ளது. மேலும், சவுகான் தனது நண்பரின் மலவாயில் செலுத்தியது தின்பண்டங்களை பாதுகாக்க பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் நைட்ரஜன் வாயு ஆகும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Madhya pradesh #Ujjain #death #Anal #Air Hose #police #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story