நான் போட்ட கோலத்தை எப்படி தாண்டி காரில் போவாய்? - கார் கண்ணாடியை உடைத்த பெண்மணி.!
நான் போட்ட கோலத்தை எப்படி தாண்டி காரில் போவாய்? - கார் கண்ணாடியை உடைத்த பெண்மணி.!
மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள நரசிங்ப்பூர் மாவட்டம், கடர்வாரா, பரஞ் பகுதியை சேர்ந்த பெண்மணி மது ஜெயின்.
சம்பவத்தன்று இவர் வீட்டின் முன்பு கோலம்போட்டுள்ளார். இவரின் தெருவில் உள்ள மற்றொரு வீட்டிற்கு காரில் உறவினர் வந்துள்ளார்.
அவர்கள் பயணித்த கார் கோலத்தை தாண்டி வந்துள்ளது. இதனால் கோலம் அழிந்ததாக தெரியவருகிறது.
இது மதுவுக்கு தெரியவரவே, ஆத்திரமடைந்த அவர் தான் இட்ட கோலத்தை எப்படி அழிப்பீர்கள்? என காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக வீடியோ எடுத்த வைத்த குடும்பத்தினர், மதுவுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.