77 வயது மூதாட்டியை நிர்வாணமாக்கி, சிறுநீர் குடிக்க வைத்து ஊர்வலம்; சூனியம் செய்ததாக தாக்கி கொடூரம்.!
77 வயது மூதாட்டியை நிர்வாணமாக்கி, சிறுநீர் குடிக்க வைத்து ஊர்வலம்; சூனியம் செய்ததாக தாக்கி கொடூரம்.!

77 வயது மூதாட்டி ஒருவரை நிர்வாணப்படுத்தி, முகத்தில் கரியைப்பூசி, ஊர்வலம் இழுத்துச் சென்று சிறுநீர் குடிக்க வைத்து தாக்கிய கொடுமை சிக்கல்தாரா பகுதியில் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அமராவதி மாவட்டம், சிக்கல்தாரா தாலுகா, ரெத்யகேடா கிராமத்தில், 77 வயது மூதாட்டி மாந்த்ரீகம் செய்ததாக கூறி அதிர்ச்சி செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூதாட்டியை கிராமமே வேடிக்கையும் பார்த்து இருக்கிறது.
இதையும் படிங்க: கடனுக்காக இளம்பெண் குத்திக்கொலை.. சக ஊழியர் நடத்திய பயங்கரம்.. பதறவைக்கும் காட்சிகள்.!
மூதாட்டியை அவமதித்த சோகம்
கடந்த டிசம்பர் 30, 2024 அன்று இக்கொடூர செயல் நடைபெற்ற நிலையில், நேற்று முன்தினம் தான் இதுதொடர்பாக தகவல் வெளியாகி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதே கிராமத்தில் வசித்து வந்த சைபு சதுர், அவரின் மனைவி ஆகியோர் மூதாட்டியை சூனியக்காரி என கூறி பிரச்சனை செய்துள்ளார்.
அதன்பின்னரே கிராமத்தினரான பாபு ஜாமுங்கர், சைபு சதுர், சாபுலால் சதுர், ராம்ஜி சதுர் மற்றும் பிற நபர்கள் மூதாட்டியை தாக்கி, மிளகாய் பொடித்தூவி, கழுத்தில் செருப்பு நெக்லஸ் மாட்டி, சிறுநீர் குடிக்க வைத்து அவமதித்து நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து சென்றுள்ளனர். மூதாட்டிக்கு உதவ யாருமே முன்வரவில்லை.
இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க: சிறுமியின் மீது விழுந்த இளைஞர்.. தலையில் காயமடைந்து, மூக்கு உடைந்து பரிதாப மரணம்.!