கொரோனா என்னும் கொடிய அரக்கனிடம் சிக்கி தவிக்கும் மகாராஷ்டிரா! பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
Maharashtra is first place affected by corona
இந்தியாவில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் இந்தியாவில் முக்கியமாக கொரோனா என்னும் கொடிய அரக்கனிடம் மகாராஷ்டிர மாநிலம் சிக்கி தவித்து வருகிறது.
இதுவரை இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் தான் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் முதலிடம் வகித்து வருகிறது. இந்நோயால் நேற்று ஒரு நாள் மட்டும் மகாராஷ்டிராவில் 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நேற்றுவரை மட்டும் மகாராஷ்டிர மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 748ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் 45ஆக உயர்ந்துள்ளது.
இதனை வைத்து பார்க்கும் போது மகராஷ்டிரா மாநில அரசு கொரோனாவை தடுக்க இன்னும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது.