பேருந்து வசதி நிறுத்தம்.! உணவு கூட இல்லாமல் 135 கிலோமீட்டர் நடந்து சென்று சொந்த ஊரை அடைந்த வாலிபர்..!
Maharashtra Labourer Walks 135 Km To Reach His Village
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இதுவரை 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் கடும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்தியாவிலும், கொரோனா பாதிப்பு இதுவரை 600-ஐ தாண்டியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நகர்ப்புறங்களில் இருந்த மக்கள், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் அடித்துபிடித்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளன்னர்.
பெரும்பாலானோர் பேருந்து, ரயில் போக்குவரத்து இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிவருகின்றனர். இந்நிலையில் நாக்பூரில் பணிபுரிந்து வந்த சந்த்ராபுர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான தினக்கூலி வாலிபர் ஒருவர் தற்போது வேலை இல்லாததால் தனது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
ஆனால், ஊருக்கு செல்வதற்கான போக்குவரத்துக்கு வசதி இல்லாததால் சுமார் 135 கிலோ மீட்டர் தூரத்தை உண்ண உணவு கூட இல்லாமல் நடந்தே சென்று தனது ஊரை அடைந்துள்ளார். அதேபோல், கால் உடைந்த தனது மனைவியை தூக்கி கொண்டு, ராஜஸ்தானை சேர்ந்த ரமேஷ் மீனா எனும் தொழிலாளர் தனது ஊருக்கு நடந்தே சென்றுள்ளார்.
இந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.