செல்பி மோகம், உயிரை பறித்த பரிதாபம்.. ஆற்றுக்குள் தவறி விழுந்து சிறுமி, இளம்பெண் பரிதாப பலி..!
செல்பி மோகம், உயிரை பறித்த பரிதாபம்.. ஆற்றுக்குள் தவறி விழுந்து சிறுமி, இளம்பெண் பரிதாப பலி..!
ஆற்றை கண்டுகளிக்க சென்று செல்பி எடுத்து 2 பேர் நீருக்குள் மூழ்கி பலியான சோகம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, காட் பகுதியில் வைட்டர்னா ஆறு ஓடுகிறது. நேற்று மாலை 6 மணியளவில் ஆற்றின் அழகை கண்டு ரசிக்க ஒரே குடுமப்த்தை சேர்ந்த 4 பேர் ஆற்றுக்கு சென்றுள்ளனர்.
அப்போது, அவர்கள் செல்பி எடுக்க முயற்சித்த தருணத்தில், நால்வரும் எதிர்பாராத விதமாக ஆற்றுக்குள் தவறி விழுந்துள்ளனர். இந்த சம்பவத்தில் பேர் நீச்சலடித்து கரையேறி இருக்கின்றனர். ஆனால், நீலா தாமிஸிங் தஸ்னா (வயது 24), சாந்து தாசனா (வயது 15) ஆகியோர் தப்பி வரத்தெரியாமல் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மீட்பு படையினருக்குத் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரின் உடலையும் சடலமாக மீட்டனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.