#ShockingVideo: கிரானைட் கல் தலையில் விழுந்து வாலிபர் பரிதாப சாவு.. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்..!
#ShockingVideo: கிரானைட் கல் தலையில் விழுந்து வாலிபர் பரிதாப சாவு.. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்..!
புதிதாக கடை திறக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தவரின் தலையில் கிரானைட் கல் விழுந்து பலியான பரிதாபம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, தஹிசர் பகுதியை சேர்ந்தவர் கல்யாண் கிரி (வயது 38). இவர் டெம்போ ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில், சில காரணங்களால் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். பின்னர், தந்தையுடன் சேர்ந்து சிற்றுண்டி உணவகம் வைத்து நடத்தலாம் என திட்டமிட்டுள்ளார்.
இதனையடுத்து, தந்தையும் - மகனும் வடாபாவ் பகுதியில் உணவகம் திறக்க திட்டமிட்டு, அங்கு நேற்று சென்று கட்டிடத்தை பார்வையிட்டுள்ளனர். இவர்களுக்கு, வடாபாவ் பகுதியில் உள்ள மகாலட்சுமி எஸ்.ஆர்.ஏ கட்டிடத்தில் உள்ள இடம் கிடைத்த நிலையில், அங்கு பூஜை நடத்தப்பட்டுள்ளது.
அப்போது, அருகே இருந்த கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த மார்பில் கல், கல்யாண் கிரியின் தலையில் விழுந்துள்ளது. இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பாதி மண்டை பிளந்தவாறு கல்யாண் உயிருக்கு துடித்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கல்யாண் கிரியின் தந்தை மகனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.