3 மணிநேரத்தில் கொட்டித்தீர்த்த பேய்மழை: வெள்ளத்தின் பிடியில் நாக்பூர்.. முடங்கியது மக்களின் இயல்பு வாழ்க்கை.!
3 மணிநேரத்தில் கொட்டித்தீர்த்த பேய்மழை: வெள்ளத்தின் பிடியில் நாக்பூர்.. முடங்கியது மக்களின் இயல்பு வாழ்க்கை.!
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உச்சம்பெற்றுள்ள பருவமழையின் காரணமாக, பல மாநிலங்கள் வெள்ளத்தில் மிதந்தன. உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உட்பட முக்கிய மாநிலங்களில் இருந்த நகரங்கள் அனைத்தும் வெள்ளத்தின் பிடியில் சிக்கின.
இந்நிலையில், நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, நாக்பூரில் கொட்டித்தீர்த்த பேய் மழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் சிக்கி இருக்கின்றன.
நேற்று இரவில் 3 மணிநேரத்தில் 110 மில்லி மீட்டர் அளவு பெய்த மழையின் காரணமாக, அங்கிருக்கும் அம்பாஜிஹாரி அணை நிரம்பி வழிந்து, உபரி நீர் அவசரகதியில் வெளியேற்றப்பட்டுள்ளது.
இதனால் நாக்பூர் நகரின் பெரும்பாலான பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் சிக்கி இருக்கின்றன. தேசிய பேரிடர் மீட்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றனர்.