பள்ளி முதல்வரை, எட்டி பார்த்த மாணவர்கள்.. கண்ட அதிர்ச்சி காட்சி.. அடுத்தடுத்த விபரீதம்.!
பள்ளி முதல்வரை, எட்டி பார்த்த மாணவர்கள்.. கண்ட அதிர்ச்சி காட்சி.. அடுத்தடுத்த விபரீதம்.!
மது போதையில் முதல்வர்
மகாராஷ்டிரா மாநிலத்தின் நாந்தெட் பகுதியில் 55 வயது கொண்ட ஒரு பள்ளி முதல்வர் வகுப்பறையில் மது அருந்தி விட்டு இருந்துள்ளார். பள்ளி மாணவர்கள் இதை பார்த்துவிட்டு தங்கள் பெற்றோர்களிடம் சென்று தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அங்கிருந்த கிராம மக்கள் முழுவதிலும் தீயாக பரவியது.
பதில் கூட பேச முடியாத நிலை
இது பற்றி கல்வி அதிகாரிகளுக்கு தெரிய வர 3 அதிகாரிகளை பள்ளிக்கு அனுப்பி அவர்கள் விசாரித்துள்ளனர். அப்போது மது போதையில் பள்ளி முதல்வர் இருப்பதை அவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரால் சரியாக பதில் கூட பேச முடியாத நிலையில் போதையில் இருந்துள்ளார். இதை அவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: சட்டைப்பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்ததால் பரிதாபம்; ஆசிரியர் பரிதாப பலி.!
வைரல் வீடியோ
இது பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாலை முதல்வர் வீட்டிற்கு வந்த நிலையில் தான் குறித்த அவமானகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருப்பதை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர், தனது அறைக்கு சென்ற அவர் மறுநாள் வரை வெளியில் வரவில்லை.
தற்கொலை
நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததை பார்த்த குடும்பத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய பிணமாக கிடந்துள்ளார். தனக்கு மது போதையினால் ஏற்பட்ட அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாத பள்ளி முதல்வர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இது பற்றி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து; 11 பேரின் உயிரை பறித்த சோகம்..!