×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட கொடுமையே! ஒரு முதல்வரின் மனைவி செய்ய கூடிய காரியமா இது? வீடியோ உள்ளே!

maharastra cm wife taking selfie in edge of boat

Advertisement

செல்பி மோகம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. வித்தியாசமான முறையில் செல்பி எடுக்க ஆசைப்பட்டு பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கவேண்டிய முதல்வரின் குடும்பத்தினரே இப்படி செய்திருப்பது மிகவும் கண்டிக்கக் கூடியது.

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பலரின் முன்னிலையில் கப்பலின் விளிம்பிற்கு சென்று செல்பி எடுத்துள்ளார். பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுரை கூறியும் அதை பொருட்படுத்தாத அவர் செல்பி எடுக்கும் காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளது.



இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பல் போக்குவரத்தை மும்பை கடல் பகுதியில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

இந்த தொடக்க விழாவுக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உடன் அவரது மனைவி அம்ருதாவும் சென்றிருந்தார். அப்போது அம்ருதா பட்னாவிஸ் பாதுகாப்பு எல்லையை தாண்டி கப்பலின் விளிம்பு பகுதியில் அமர்ந்து கொண்டு செல்பி எடுத்துள்ளார்.

இவரைப் போன்றவர்கள் தான் பல இளம் வயதினருக்கும் இதைப்போன்று ஆபத்தான நிலையில் செல்பி எடுப்பதற்கான ஆர்வத்தை தூண்டுகின்றனர். இவரை வைத்தே இதற்கான விழிப்புணர்வை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பலர் எண்ணுகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#maharastra cm wife taking selfie in edge of boat #maharastraCM #devendra fadnavis #amrutha fadnavis #cm wife taking selfie
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story