"மாதவிடாய் களங்கம் அல்ல அது இயற்கையே...." மகாராஷ்டிரா இளைஞரின் புதுமையான முயற்சி.!
மாதவிடாய் களங்கம் அல்ல அது இயற்கையே....... மகாராஷ்டிரா இளைஞரின் புதுமையான முயற்சி !
என்னதான் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் ஒரு சில விஷயங்களில் சமூகம் பின்தங்கிய இருக்கிறது. அதிலும் பெண்களுக்கு எதிராக குறிப்பாக மாதவிடாய் என்பது ஒரு தீட்டாக சமூகத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்த நேரங்களில் பெண்கள் தனிமைப்படுத்தப்படுவதோடு அவர்களுக்கு எதிரான சமூகத்தின் அடக்குமுறை ஓங்குகிறது. இதற்கு எதிராக மகாராஷ்டிராவை சார்ந்த இளைஞர் ஒருவர் மாதவிடாய் திருவிழா என ஆரம்பித்து நடத்தி வருவது சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த நிஷாந்த் பகீரா என்ற இளைஞர் மக்கள் மனதில் மாதவிடாய் குறித்து இருக்கும் தவறான எண்ணங்களை போக்க தீவிரமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார் . இதன் ஒரு பகுதியாக அவரது நிறுவனத்தின் மூலம் மாதவிடாய் திருவிழா என்ற ஒன்றையும் நடத்தி வருகிறார் இதற்கு சமூகத்தில் நல்ல வரவேற்பு இருப்பதோடு மக்களிடம் பெரும் அளவில் மாற்றங்களும் ஏற்பட்டு இருக்கின்றன.
இதுகுறித்து பேசி இருக்கும் அவர் "மாதவிடாய் அமைப்பு ஒன்றை நிறுவி பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் என்பது அவர்களது உடலில் இயற்கையாக நிகழும் ஒரு அறிவியல் நிகழ்வு என்றும் இதனால் தீட்டு களங்கம் என்று ஏதும் இல்லை என பிரச்சாரம் செய்து வருவதாக கூறினார். மேலும் இந்த விஷயங்களைப் பற்றி ஆண்கள் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அப்போதுதான் பெண்களுக்கு எதிரான நிலை மாறும் எனவும் தெரிவித்தார். இதற்காகவே தனது நிறுவனம் நடத்தும் நிகழ்வுகளில் அதிக அளவு ஆண்களை கலந்து கொள்ள வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இவரைப் போன்றே தற்போது உலகின் 19 நாடுகள் மாதவிடாய் திருவிழாவை கொண்டாடி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படும் நாப்கின் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். சமூகத்தில் பெண்களுக்கு உடல் ரீதியாக இயற்கையான முறையில் நடக்கும் ஒரு நிகழ்வை வைத்து அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்காகவும் இது இயற்கையான ஒரு நிகழ்வு தான் இன்று மக்களிடம் புரிய வைப்பதற்காகவும் இந்த அமைப்பை தொடங்கி செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.