5 ஜி ஜியோவுக்காக 2 இலட்சம் கோடி முதலீடு.. தீபாவளியில் 5 ஜி சரவெடி - முகேஷ் அம்பானி அசத்தல் அறிவிப்பு.!
5 ஜி ஜியோவுக்காக 2 இலட்சம் கோடி முதலீடு.. தீபாவளியில் 5 ஜி சரவெடி - முகேஷ் அம்பானி அசத்தல் அறிவிப்பு.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45-ம் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பேசுகையில், "உலகின் அதிவேக 5 ஜி சேவை திட்டத்தினை ரிலையன்ஸ் ஜியோ தயாரித்துள்ளது.
தீபாவளியில் டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை உட்பட பல முக்கிய மெட்ரோ மற்றும் பிற நகரங்களில் 5 ஜி ஜியோ சேவை அறிமுகமாகும். 2023 டிசம்பருக்குள் இந்தியாவின் ஒவ்வொரு தாலுகா, நகரத்திற்கும் ஜியோ 5 ஜி சேவை கிடைக்கும். இவ்வாறு வழங்கப்படும் 5 ஜி சேவை மக்களிடம் உயர் தரத்துடன் மலிவு விலையில் சென்றடையும்.
சீனா மற்றும் அமெரிக்காவை விட இந்திய பொருளாதாரத்தை உயர்நிலைக்கு கொண்டு செல்ல நாங்கள் உறுதி எடுத்துள்ளோம். இந்தியாவை 5 ஜி நெட்வொர்க்கால் இணைக்க 2 இலட்சம் கோடி முதலீடு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.