நேரடியாக களத்தில் இறங்கி வட்டம் போட்டு காட்டிய மம்தா பானர்ஜி.! வைரலாகும் வீடியோ.
Mamtha told awareness of corona in public people
சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நோய் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இதுவரை இந்நோயால் 600க்கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வழியுறுத்தி வருகிறது. ஆனால் ஒரு சில இடங்களில் மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருந்து வருகின்றனர்.
அதேபோல் தான் மேற்கு வங்கம் போன்ற பெரிய மாநிலங்களில் இன்னமும் மக்களிடம் விழிப்புணர்வு வரவில்லை. கொல்கத்தா நகரில் நடைபாதையில் காய்கறி விற்கும் இடங்களில் மக்கள் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர்.
இது முதல்வர் மம்தா பானர்ஜியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக களத்திற்கு வந்த அவர் ஒவ்வொரு வியாபாரிகளுக்கும் முன்பாக குறிப்பிட்ட இடைவெளியில் செங்கலால் வட்டமிட்டதோடு, அந்த வட்டத்திற்குள் நிற்பவர்களுக்கு மட்டுமே காய்கறி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.