"நம்ம ஆளுங்கள விட காதல் பெருசா.." பெண் போலீஸ் கௌரவ கொலை.!! தம்பி வெறி செயல்.!!
நம்ம ஆளுங்கள விட காதல் பெருசா.. பெண் போலீஸ் கௌரவ கொலை.!! தம்பி வெறி செயல்.!!
தெலுங்கானா மாநிலத்தில் வேறு ஜாதி நபரை காதலித்த பெண் போலீஸ் சொந்தத் தம்பியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சரணடைந்த நபரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேறு ஜாதி இளைஞருடன் காதல்
தெலுங்கானா மாநிலத்தின் ராயபோலு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகமணி. இவரது பெற்றோர் இறந்துவிட்ட நிலையில் தம்பி பரமேஷ் என்பவருடன் வசித்து வந்தார். மேலும் நாகமணி கடந்து 2020 ஆம் வருடம் முதல் தெலுங்கானா காவல்துறையில் கான்ஸ்டபிளாகவும் பணியாற்றி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இந்நிலையில் நாகமணிக்கு தனது கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற வேறு ஜாதி இளைஞருடன் காதல் ஏற்பட்டது.
காதலனை திருமணம் செய்த நாகமணி
தனது சகோதரி காதலித்து வரும் நபர் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் பரமேஷ் அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். எனினும் நாகமணி மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் நவம்பர் ஒன்றாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நாகமணி தனது மாமியார் குடும்பத்துடன் ஹைதராபாத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் விடுமுறையை கழிப்பதற்காக தனது சொந்த ஊருக்கு கணவருடன் நாகமணி வந்திருக்கிறார்.
இதையும் படிங்க: "எனக்கு பெண் கொடுத்த நீங்க நல்லவங்க.. ஆனா உங்க பொண்ணு.." திருமணமான 1 வருடத்தில் சோகம்.!! மணமகனின் துயர முடிவு.!!
கௌரவ கொலை
இந்நிலையில் விடுமுறை முடிந்து வேலைக்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் சென்ற நாகமணியை பின் தொடர்ந்து சென்ற அவரது தம்பி பரமேஷ் காரால் இடித்து கீழே தள்ளி இருக்கிறார். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது சகோதரியை குத்தி கொடூரமாக படுகொலை செய்திருக்கிறார் பரமேஷ். தனது சகோதரி இறந்த பிறகு காவல் நிலையத்தில் சென்று சரணடைந்திருக்கிறார். இதனையடுத்து பரமேஷை கைது செய்த காவல்துறையினர் அவரை சிறையிலடைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட நாகமணியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: 35 வயது நபர் குத்தி படுகொலை.!! 16 வயது சிறுவன் வெறி செயல்.!! பதற வைக்கும் பின்னணி.!!