தாத்தாவை அடக்கம் செய்ய குழி தோண்டியபோது பேரன் கூறிய ஒற்றை வார்த்தை..! அடுத்த நொடியே பேரனும் உயிரிழந்த அவலம்.!
Man in Uttar Pradesh dies while digging grandfathers grave
உத்திரபிரதேச மாநிலத்தில் தனது தாத்தாவை அடக்கம் செய்வதற்கு குழி தோண்டிய போது அவரது பேரன் மாரடைப்பில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் முஸாபர்நகர் மாவட்டத்திலுள்ள ஜன்சாத் பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது யூசுப். 80 வயதான முகம்மது யூசுப் வயது முதிர்வு காரணமாக இரண்டு நாட்களுக்கு முன் உயிர் இழந்தார். இதனை அடுத்து அவரை அடக்கம் செய்வதற்காக மயானத்தில் குழி தோண்டும் பணி நடைபெற்றுள்ளது.
குழி தோண்டும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இறந்தவரின் பேரன் சலீம் என்பவர் திடீரென நெ ஞ்சைப்பிடித்து கொண்டு கீழே விழுந்துள்ளார். பின்பு அங்கிருந்தவர்கள் சலீமை மருத்துவமனையில் சேர்த்தனர். சலீமை சோதித்த மருத்துவர்கள் சலீம் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
சலீம் இறந்த தகவல் கேட்டு அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர் தாத்தாவை அடக்கம் செய்த இடத்திற்கு அருகில் மற்றொரு குழி தோண்டி சலீமையும் அடக்கம் செய்துள்ளனர்.
இதுகுறித்து சலீமின் உறவினர் ஒருவர் கூறுகையில், “சலிமுக்கு முன்னரே ஏதோ உள்ளுணர்வு தோன்றியுள்ளது. குழி தோண்டிக் கொண்டிருந்தபோது, அருகில் மற்றொரு குழியையும் தோண்டுமாறு எங்களிடம் கூறினார். கடைசியில் அந்த குழி அவருக்காக இருக்கும் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.