35 பேரின் உயிரை காப்பாற்றியவரின் இரண்டு கண்பார்வையும் போன துயர சம்பவம்!.
35 பேரின் உயிரை காப்பாற்றியவரின் இரண்டு கண்பார்வையும் போன துயர சம்பவம்!.
கேரள வெள்ளத்தின்போது செங்கானுர் பகுதி முற்றிலும் தண்ணீரில் தத்தளித்த போது சதாசிவன் என்பவருக்கு அவரின் நண்பர் சந்தோஷிடமிருந்து போன் வந்தது. போனில், தன் குடும்பத்தினர் மற்றும் 35 பேர் வெள்ளத்தில் தத்தளிப்பதாக கூறினார்.
இதனையடுத்து அவசர அவசரமாக அங்கு சென்ற சதாசிவன், நண்பர்களுடன் சேர்ந்து இரவு முழுவதும் போராடி 35 பேரையும் வெள்ளத்திலிருந்து உயிருடன் மீட்டார். மீட்புப் பணியின்போது கண்ணில் காயம் ஏற்பட்டு அதையும் தங்கி கொண்டு மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் கண் வலியால் துடித்த சதாசிவம் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது கண் நரம்பு பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதற்கு சரியான சிகிச்சை எடுக்கவில்லை என்றால் இரண்டு கண்களின் பார்வையும் பறிபோகும் என மருத்துவர்கள் எச்சரித்தனர்.
ஆனால் ஏழை குடும்பத்தை சேர்ந்த சாதாரண டீ வியாபாரியான சதாசிவத்தால், சிகிச்சை எடுக்க முடியவில்லை. இதன் காரணமாக அவரின் கண் பார்வையை அவர் முற்றிலுமாக இழந்துள்ளார்.
சதாசிவன் கண் பார்வை முற்றிலும் இழந்திருப்பதால் அவரின் குடும்பம் செய்வதறியாது தவித்து வருகிறது. 35 பேரின் உயிரை காப்பாற்றிய அவரின் கண்பார்வை போனதால் அவரின் குடும்பத்தினர் பெரும் சோகத்துடன் உள்ளனர்.