பையனாடா நீ? புர்கா அணிந்து இலவசமாக பயணம் செய்த ஆண்., வசமாக சிக்கியது எப்படி.?!
புர்கா அணிந்து இலவசமாக பயணம் செய்த ஆண்., வசமாக சிக்கியது எப்படி.?!
கர்நாடகாவில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் சித்தாராமையா வெற்றி பெற்றார். அதற்கு பின் அவர் அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி பெண்களுக்கு அரசு பேருந்தில் பயணம் இலவசம் என்ற சக்தி திட்டத்தை அமல்படுத்தினார். அதனைத் தொடர்ந்து பெண்கள் அனைவரும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் அம்மாநிலத்தில் உள்ள தர்வார் என்னும் மாவட்டத்தில் குந்துகோல் தாலுகா சம்சி பேருந்து நிறுத்தத்தில் புர்கா அணிந்த நபர் ஒருவர் அமர்ந்திருந்தார். ஆனால் அவரது உடல் அமைப்பு மற்றும் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தபடியால் அங்கிருந்த பெண்கள் அவரிடம் சென்று புர்காவை எடுத்து முகத்தை காண்பிக்கும்படி கூறியுள்ளனர். ஆனால் புர்காவை நீக்க அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த பெண்கள் அவரது புர்காவை வலுக்கட்டாயமாக விளக்கியுள்ளார்.
இதனால் புர்கா அணிந்திருந்த நபர் பெண்ணல்ல ஆண் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் போலீஸிடம் புகார் தெரிவித்தனர். இவர் இலவசமாக பேருந்தில் பயணம் செய்வதற்காக புர்கா அணிந்து வந்ததாக கூறியுள்ளார். ஆனால் இவரிடம் இருந்த ஆதார் கார்டிலும் பெண் புகைப்படம் கூடியதாகவே இருந்தது. இதனால் இவர் இலவசமாக பயணம் செய்வதற்காக புர்காஅணிந்து வந்தாரா? இல்லை வேறு ஏதேனும் குற்ற செயலில் ஈடுபடுவதற்காக இவ்வாறு வந்தாரா? என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார் .