மேடையில் தாக்கி கொண்ட மணப்பெண்-மாப்பிள்ளை.. கலவரமான கல்யாண வீடு!
மேடையில் தாக்கி கொண்ட மணப்பெண்-மாப்பிள்ளை.. கலவரமான கல்யாண வீடு!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் மணப்பெண், மாப்பிள்ளை இருவரும் தாக்கிக் கொண்டதால் திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம் வீரட்டில் உள்ள தௌராலா பகுதியில் கடந்த திங்கட்கிழமை அதிர்ச்சிதரும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதன்படி டெல்லியில் ஒரே அலுவலகத்தில் வேலை செய்த இளம் பெண்ணும், இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதித்த நிலையில், திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த நிலையில் திருமண நாளன்று மணமகன் ஊர்வலம் வர தாமதமானதால், மணப்பெண்-மாப்பிள்ளை இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த மணமகன் அனைவரும் முன்னிலையிலும் மணமகளை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணமகள் திருப்பி அடித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டு திருமணத்தையே நிறுத்திவிட்டனர்.