செல்போனுக்கு தாலிகட்டிய மணமகன்.! தனக்கு தானே தாலிகட்டிக்கொண்ட மணமகள்.! ஊரடங்கால் நடந்த வினோத திருமணம்.!
Marriage happened via video call in kerala
ஊரடங்கு உத்தரவால் மணமகன் தொலைபேசிக்கு தாலி கட்டியதும், மணமகள் தனக்கு தானே தாலி கட்டிக்கொண்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா காரணமாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் வரும் மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்துவிதமான போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் முக்கிய நிகழ்வுகளுக்கு கூட போக முடியாமல் மக்கள் தவித்துவருகின்றனர். இந்நிலையில், கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த கங்கனசேரியைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஸ்ரீஜித் நடேசன் என்பவருக்கும், ஐடி ஊழியர் அஞ்சனாவுக்கும் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி திருமணம் செய்வதாய் கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ஆனால் உத்தரபிரதேசத்தில் பணியாற்றி வந்த மணப்பெண்ணால் ஊரடங்கு காரணமாக கேரளாவிற்கு திரும்ப முடியவில்லை. இதனால் வீடியோ கால் மூலம் நிச்சயித்த திருமணத்தை நடத்துவது என உறவினர்கள் முடிவு செய்தனர். இதனை அடுத்து கேரளாவில் இருந்து மணமகன் திரையில் தோன்றிய மணமகள் அஞ்சனாவுக்கு தொலைபேசி மூலம் தாலி கட்டினார்.
அதே நேரத்தில் மறுமுனையில் இருந்த மணமகள் அஞ்சனா தனக்கு தானே தாலி கட்டிக்கொண்டார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.