ஊரே வெள்ளத்தில் மூழ்கியநிலையில் நடைபெற்ற திருமணம்!! அடுத்தகணமே மணமகன் செய்த அதிர்ச்சி காரியம்!! வீடியோ இதோ!!
marriage in flood at kerala
கண்ணூர் அருகே சிரகொல்லி பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த திவ்யா என்பவருடன் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருமண ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், கண்ணனூர் பகுதியில் பெய்த கனமழையால் பெரும் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் மணவீட்டாரின் வீடுகள், திருமண மண்டபங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இந்நிலையில் திருமணத்தை வீட்டிலேயே நடத்த இருகுடும்பத்தினரும் முடிவு செய்தனர்.
ஆனால் அதற்காக போடப்பட்ட மணமேடையும் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், திருமணத்திற்கு குறித்த முகூர்த்தத்தில் மணமகள் வீட்டின் உள்ளேயே எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
ராஜேஷ் மற்றும் திவ்யா இருவருக்கும் திருமணம் முடிவுற்ற நிலையில் வீட்டைவிட்டு திருமண தம்பதியினர் வெளியேயுள்ளனர். அப்பொழுது வீட்டை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்திருந்த நிலையில், மணக்கோலத்தில் இருந்த திவ்யா தண்ணீரில் கால் வைக்க தயங்கியுள்ளார்.
உடனே மணமகன் ராஜேஷ் தனது மனைவியை தூக்கி கொண்டு சென்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், அந்த புதுமணத்தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.