இந்த கல்யாணமே வேண்டாம்.. இனிப்பால் வெடித்த தகராறு.! மணப்பெண் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சி!!
இந்த கல்யாணமே வேண்டாம்.. இனிப்பால் வெடித்த கலவரம்.! மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு!!
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் ஹனகல்லு கிராமத்தில் சித்தார்த்தா படாவனே பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மஞ்சுநாத் என்பவரது 23 வயது மகளுக்கு, துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்ஷித் என்ற 27 வயது வாலிபருடன் திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று திருமணம் நடைபெறவிருந்த நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு முன்பு மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது.
இனிப்பால் வெடித்த தகராறு
சம்பிரதாயப்படி திருமண விருந்தில் முதலில் இனிப்பு வைப்பது வழக்கம். ஆனால் விருந்தில் தங்களுக்கு இனிப்பு வைக்கவில்லை, தங்களது சம்பிரதாயம் அவமதிக்கப்பட்டதாக கூறி மணமகன் குடும்பத்தினர் தகராறு செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் மணமகள் குடும்பத்தினரும் பொறுமையை இழந்து அவர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.மேலும் இரு தரப்பினரும் தாக்கி கொண்டுள்ளனர். பின்னர் விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் முகூர்த்த நேரம் நெருங்கிய போது மணமகன் தாலி கட்ட தயார் என கூறியுள்ளார்.
நின்றுபோன திருமணம்
அனைத்தையும் கண்டு பொறுமையாக இருந்த மணமகள் திடீரென திருமணத்திற்கு முன்பே ஒரு சின்ன விஷயத்திற்காக இவ்வளவு பிரச்சனை செய்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு அவர்களுடன் தன்னால் எப்படி நிம்மதியாக வாழ முடியும் என கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார். அவருடைய பெற்றோர், உறவினர்கள் எவ்வளவோ சமாதானபடுத்தியும் அவர் கேட்கவில்லை.
போலீசில் புகார்
பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் செய்த அவர், இந்த திருமணத்திற்காக தனது பெற்றோர் அதிகமாக செலவு செய்து நஷ்டமடைந்ததாகவும், அந்த செலவுக்கான தொகையை மணமகன் குடும்பத்தினரிடமிருந்து பெற்று தருமாறும் புகாரில் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார் இதுகுறித்து இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.