மனைவியை வேறொரு நபருக்கு திருமணம் செய்துவைத்த கணவன்!! முதல் இரவு முடிந்ததும் புது மாப்பிளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..
தனது மனைவியை வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைத்து, மோசடி செய்த கணவன் மற்றும் மனைவியை போல
தனது மனைவியை வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைத்து, மோசடி செய்த கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம், கோட்டா என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதி தான் சோனு மற்றும் கோமல். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டநிலையில் தற்போது கொரோனா காரணமாக வேலை இல்லாமல் அன்றாட பிழைப்புக்கே சிரமப்பட்டுவந்துள்ளனர். இந்நிலையில்தான் கணவன் மனைவி இருவரும் அந்த மோசமான முடிவை எடுத்துள்ளனர்.
கணவன் மனைவி இருவரும் அந்த பகுதியில் உள்ள கல்யாண தரகர் ஒருவரை அணுகி, இவர் எனது சகோதரி எனவும், இவருக்கு திருமண செய்துவைக்க நல்ல வரன் வந்தால் கூறவும் என கூறிவிட்டு வந்துள்ளனர். திருமணத்தில் கிடைக்கும் நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடிப்பது இவர்களின் திட்டம்.
இந்நிலையில் தரகர் சுமன், ரவி என்பவருக்கு கோமலைப் பெண் கேட்டுள்ளார். அவர்களும் திருமணத்திற்க்கு சம்மதம் தெரிவித்து, இருவருக்கும் திருமணமும் நடந்து முடிந்தது. முதல் இரவுக்கு அடுத்தநாள் கோமல் வீட்டில் இல்லை. மேலும் வீட்டில் இருந்த பணம், நகை ஆகியவற்றையும் காணவில்லை.
இதனால் பதறிப்போன புதுமாப்பிள்ளை, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, போலீசார் கோமல் மற்றும் அவரது கணவனை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் கலையான ப்ரோக்கரும் உடந்தை என்பது விசாரணையில் தெரியவந்தநிலையில், தற்போது மூவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.