நில்லுன்னு சொன்னா நிற்குமா? கொரோனா பீதி! குட்டி அஸ்வந்த் வெளியிட்ட கியூட் வீடியோ!
Master ashwant post corono awarness video
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 170 க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. உலகெங்கும் கொரோனோவால் பாதிக்கப்பட்டு இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 10000க்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உலக நாடுகளே பெரும் பீதியில் உள்ளது.
மேலும் இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. தற்போது 271 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு, வைரலாகி வருகிறது.