×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பணிபுரியும் பெண்களுக்கு 182 நாட்கள் மகப்பேறு விடுமுறை!! பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு!!

maternity leave for women

Advertisement

பாஜக ஆட்சியின் கடைசி பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடராக நடைபெற்று வருகிறது. 

இந்த இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், ரஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத் போன்றோர் கலந்துகொண்டனர். உடல்நலக் குறைவால் அமைச்சர் அருண்ஜெட்லி இதில் கலந்துகொள்ளவில்லை.

இது பாஜக அரசின் ஆறாவது மற்றும் கடைசி பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகும். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்கலாம் என மக்கள் எதிர்ப்பார்த்தனர். 

பட்ஜெட்டில் பியூஸ் கோயல் கூறியது:

* கடந்த 5 வருடத்தில் 239 பில்லியன் டாலரை அந்நிய முதலீடாக இந்தியா பெற்றுள்ளது. 

* 2 ஹெக்டேர் வரையுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த தொகை மூன்று தவணைகளில் நேரடியாக வங்கி கணக்கில் வழங்கப்படுமாம். இதன்மூலம் 12 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெறுமாம். 

* இந்தியாவில் இனிமேல் மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லாத நிலை வரும் மார்ச் மாதத்திற்குள் உருவாகும்.

* ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படும்.

* ஊரக சுகாதாரம் 98 % உறுதி செய்யப்பட்டு 5.45 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடமில்லாதவையாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரம் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#budjet #maternity leave
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story