விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவுக்காக, போராடிய மனைவி.. டாக்டர் சொன்ன காரணம்.!
விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவுக்காக, போராடிய மனைவி.. டாக்டர் சொன்ன காரணம்.!
எதிர்பாராத விபத்து
மத்திய பிரதேச மாநிலத்தின் ரேவா பகுதியில் வசித்து வந்த ஜிதேந்திர சிங் கெஹர்வார் என்பவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் எதிர்பாராத விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைக்காக சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.
விந்தணுவை கேட்ட பெண்
அப்போது அவரின் மனைவி உடற்கூறு ஆய்வு செய்ய சம்மதம் தெரிவிக்கவில்லை. போலீசார் அவருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டபோது, "என் கணவரின் விந்தணுவை பாதுகாக்க வேண்டும்." என்று அவர் கோரிக்கையை வைத்துள்ளார். "அதை கொண்டு தான் கருத்தரித்துவிட்டு தன் கணவரின் நினைவுகளைக் கொண்டு குழந்தையுடன் வாழ்ந்து விடுவேன்." என்று அவர் கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: மனைவிக்கு திருமண ஏற்பாடு செய்த கணவன்.. 12 ஆண்டுக்கு பின் நடந்த ருசிகர நிகழ்வு.!
காலதாமதமான கோரிக்கை
அந்த பெண் கூறுவதை கேட்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்து, "அவர் இறந்து 24 மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. எனவே விந்தணுவை சேமித்து வைக்க இனி முடியாது." என்று தெரிவித்துள்ளனர். மேலும், அந்த வசதிகள் எங்கள் மருத்துவமனையில் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
கதறி அழுத மனைவி
மருத்துவர் கூறியதை கேட்டதும் மிகுந்த அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அங்கேயே கதறி அழுதுள்ளார். அவரை போலீசாரும், மருத்துவரும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதன் பின் உடற்கூறு ஆய்வு முடிந்து இறுதிச்சடங்குக்காக உறவினர்களிடம் ஜிதேந்திர சிங் கெஹர்வாரின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: பலமணி நேரம் குளித்த மருமகள்.. எட்டிப் பார்த்த மாமியாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!