காங்கிரசை கழற்றிவிட்டு, மம்தா தலைமையில் ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகள்?.. அரசியலில் அதிர்ச்சி மாற்றம்..!
காங்கிரசை கழற்றிவிட்டு, மம்தா தலைமையில் ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகள்?.. அரசியலில் அதிர்ச்சி மாற்றம்..!
காங்கிரஸ் இல்லாத மற்றொரு கூட்டணியை உருவாக்க மம்தா பானர்ஜி முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தின் முதல்வராக உள்ள மம்தா பானர்ஜி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பைக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் வந்திருந்தார். இதன்போது, அவர் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை சந்தித்து பேசினார். மேலும், ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசினார்.
இதனைப்போலவே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிரது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்த தவறியதன் காரணமாக காங்கிரசுக்கு மாற்று கூட்டணி உருவாகப்போவதாகவும் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ சாம்னா பத்திரிகையில், நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத், "மம்தா பானர்ஜி காங்கிரஸ் இல்லாத கூட்டணி குறித்து யோசனை செய்து வருவதாகவும், மஹாராஷ்ட்ராவை பொறுத்த வரையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் வலுவுடன் இருப்பதால், காங்கிரஸ் இங்கு தடம் பதிக்கப்போவதில்லை என்று மம்தா ஆதித்ய தாக்கரேவிடம் கூறியுள்ளார்.
மேற்கு வங்கம் மாநிலம் - மகாராஷ்டிரா இடையேயான சுற்றுலா, கலாச்சார உறவுகள் குறித்தும் பேசியுள்ளார். மும்பையில் பெங்கால் பவன் அமைக்கவும் மம்தா பானர்ஜி இடம்பெற்றுள்ளார். கொல்கத்தாவில் நடைபெறவிருக்கும் திரைப்பட விழாவுக்கு ஆதித்ய தாக்கரேவை அழைத்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.