சாதாரண கல்லூரியில் படித்த மாணவர் கூகுளில் பணி நியமனம்; சம்பளம் எவ்வளவு தெரியுமா?
medium college student - appointed google - abdulla khan
ஐஐடியில் படித்த மாணவர்களுக்கு கூட கூகுளில் பணி கிடைக்காத சூழலில் சாதாரண பொறியியல் கல்லூரியில் பயின்ற மும்பை மாணவர் கூகுளில் பணி நியமனம் பெற்றதால் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
மும்பையைச் சேர்ந்த மாணவர் அப்துல்லா கான் (21). ஐஐடி-யில் சேர முயற்சி செய்து, பிறகு நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் சாதாரண பொறியியல் கல்லூரியான எ.ஆர். திவாரி பொறியியல் கல்லூரியில் தற்போது இறுதியாண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் வெளியான வேலை வாய்ப்பு அறிவிப்பை அடுத்து அப்பணிக்கு அவர் விண்ணப்பித்திருந்தார். இதனால் நேர்காணலுக்கு அவரை அழைத்தது
கூகுள் நிறுவனம். அதில் வெற்றி பெற்ற அவரை இறுதிச்சுற்றுக்காக லண்டன் நகருக்கு அனுப்பியது. அங்கு நடைபெற்ற தேர்விலும் வெற்றி பெற ஆண்டுக்கு 60 ஆயிரம் பவுண்டுகள் (ரூ. 54.5 லட்சம்) போனஸ், 85 ஆயிரம் பவுண்டுகள் (ரூ. 58.9 லட்சம்) ஊதியத்தில் அப்துல்லா கானுக்கு பணி உத்தரவு வழங்கி உள்ளது கூகுள்.
இதுகுறித்து பேசிய அப்துல்லா கான், கூகுள் நிறுவனத்தின் பணியாற்றும் வாய்ப்பை எதிர்பார்க்கல்வில்லை. ஒரு அனுபவத்திற்காக மட்டும் தான் நேர்காணலில் பங்கேற்றேன். ஆனால் எனக்கு வேலை கிடைத்துவிட்டது. முன்னதாக எனக்கு அதன் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் உண்மை என்று தெரியவந்த பின், திக்குமுக்காடி போனேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.