அதிவேகத்தில் சென்ற காரை நிறுத்திய காவலரை சரமாரியாக தாக்கிய பயங்கரம்.. அதிரவைக்கும் செயல்.!
அதிவேகத்தில் சென்ற காரை நிறுத்திய காவலரை சரமாரியாக தாக்கிய பயங்கரம்.. அதிரவைக்கும் செயல்.!
அதிவேகமாக வந்த காரை போக்குவரத்து காவலர் நிறுத்தியதால், ஆத்திரமடைந்த ஓட்டுநர் அவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டம், பீமவரம் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் காவலர் குமார் என்பவர் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ஸ்ரீநிவாஸ் என்பவர் அதிவேகமாக காரை ஓட்டி வந்த நிலையில், காரை நிறுத்துமாறு போக்குவரத்து காவலர் அவருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இதனையடுத்து சிறிது தூரம் சென்று ஶ்ரீநிவாஸ் காரை நிறுத்திய நிலையில், தான் மிதமான வேகத்தில் வந்ததாகவும், அதிக வேகமாக வந்ததாக கூறி, எதற்காக தன்னுடைய வாகனத்தை நிறுத்துகிறீர்கள்? என்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆவேசமடைந்த ஸ்ரீநிவாஸ் போக்குவரத்து காவல்துறை சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளார்.
இதனால் கோபமுற்ற போக்குவரத்து காவலர் பதிலுக்கு அவரை தாக்கியுள்ளார். இதில் போக்குவரத்து காவலர் காயமடைந்த நிலையில், அவரைத் தாக்கிய கார் ஓட்டுநரான ஸ்ரீநிவாசை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.