இவர் MLA-வா இல்ல மாமாவா? தொண்டர்களுக்காக பெண்களை கடத்தி திருமணம் செய்து வைப்பேன் என்று பாஜக MLA சர்ச்சை பேச்சு
இவர் MLA-வா இல்ல மாமாவா? தொண்டர்களுக்காக பெண்களை கடத்தி திருமணம் செய்து வைப்பேன் என்று பாஜக MLA சர்ச்சை பேச்சு
"நீங்கள் காதலிக்கும் பெண்ணை உங்கள் பெற்றோருக்கு பிடித்திருந்தால், அவளைக் கடத்திக் கொண்டுவந்து உங்களிடம் கொடுப்பேன்’’ என்று மஹாராஷ்டிர மாநிலம் காட்கோபர் தொகுதி எம்.எல்.ஏ பேசுயுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையில் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள காட்கோபர் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ ராம் கதம். வடமாநிலங்களில் நேற்று கிருஷ்ணஜெயந்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது, உரிஅடித்தல் எனச் சொல்லப்படும் தாஹி ஹண்டி நடந்தது.
உறியடி திருவிழாவில், இளைஞர்கள் மத்தியில் எம்எல்ஏ ராம் கதம் பேசும்போது: இளைஞர்கள், தங்களின் எந்த வித தேவைக்காகவும் என்னை அணுகலாம். உங்களுக்கு உதவ காத்திருக்கிறேன். நீங்கள் விரும்பும் பெண், உங்களை விரும்பாவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் பெற்றோருடன் என்னை சந்தியுங்கள். அந்த பெண்ணை கடத்தி வந்து, உங்களுடன் திருமணம் செய்து வைக்க தயார். இவ்வாறு அவர் பேசினார்.
ராம் கதம் பேசிய வீடியோவை, காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜிதேந்தர் அவ்ஹாட் என்பவர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து ஜிதேந்தர் கூறும்போது, “சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய ஓர் எம்.எல்.ஏ இப்படி யோசிக்கிறார், பேசுகிறார் என்றால், சாதாரண மக்கள் எப்படி யோசிப்பார்கள். சர்ச்சையானவற்றை பேசும் பாஜகவினரின் பட்டியலில் இன்னொரு பெயர் சேர்ந்துள்ளது. ஓர் எம்.எல்.ஏ இப்படிப் பேசினால், இந்த மாநிலத்தில் வாழும் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பார்கள்’’ என்று கூறினார்.
தன்னைப் பற்றிய சர்ச்சையான வீடியோ பேச்சு குறித்து ராம் கதம் மறுப்பு கூறியுள்ளார். அவர், “நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை. காதலிப்பவர்கள் பெற்றோர்களிடம் காதலைப் பற்றிப் பேச வேண்டும். நான் பேசியதை தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்கள். இது எதிர்கட்சிகளின் அரசியல் பழிவாங்கும் செயல்’’ என்று கூறினார்.