இது சிறிய சாதனையல்ல., பிரக்ஞானந்தாவை நினைத்து பெருமைப்படுகிறோம்!! பிரதமர் மோடி பெருமிதம்!!
இது சிறிய சாதனையல்ல., பிரக்ஞானந்தாவை நினைத்து பெருமைப்படுகிறோம்!! பிரதமர் மோடி பெருமிதம்!!
நேற்று செஸ் உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவை பெருமை படுத்தும் விதமாக பிரக்ஞானந்தா இறுதி சுற்றுக்கு சென்று செஸில் உலக அளவில் பேர், புகழ் பெற்ற மேக்னஸ் கார்ல்சனுடன் விளையாடினர்.
இதில், மேக்னஸ் கார்ல்சன் ஒரு காயினை நகற்ற 27 நிமிடம் எடுத்துக்கொண்டுள்ளார். இதனால் பிரக்ஞானந்தா எந்த அளவிற்கு வல்லமையுடன் விளையாடிருக்க வேண்டும். இருவரும் சிறப்பாகவே விளையாடி இருந்தார்கள். ஆனால் இந்த இறுதி போட்டியில் பிரக்ஞானந்தா தோல்வியை தழுவினார். மேக்னஸ் கார்ல்சன் உலக கோப்பையை வென்றுள்ளார்.
இருப்பினும் பதினெட்டு வயதுடைய பிரக்ஞானந்தா இந்திய நாட்டினை பிரதிபலிக்கும் விதமாக ஆற்றிய இச்செயல் மிகவும் பெருமைக்குரியதே. இதனால் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், இவரை பாராட்டும் விதமாக இந்திய பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்:-
"FIDE உலகக் கோப்பையில் பிரக்ஞானந்தாவின் சிறப்பான ஆட்டத்திற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்! அவர் தனது விதிவிலக்கான திறமைகளை வெளிப்படுத்தினார் மற்றும் இறுதிப் போட்டியில் வல்லமைமிக்க மேக்னஸ் கார்ல்சனுக்கு கடுமையான சண்டையை வழங்கினார். இது சிறிய சாதனையல்ல. அவரது வரவிருக்கும் போட்டிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.