உலகக்கோப்பை: இந்திய வீரர்களுக்கு கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்ன பிரதமர் நரேந்திரமோடி.!
உலகக்கோப்பை: இந்திய வீரர்களுக்கு கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்ன பிரதமர் நரேந்திரமோடி.!
2023 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆரம்பத்திலிருந்து இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றது. இந்த தொடரை பொருத்தவரையில் ஒரு தோல்வியைக் கூட காணாமல் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி.
இந்த நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதன் மூலமாக 3வது முறையாக இந்திய அணியின் சாம்பியன் கனவு தகர்ந்தது. மேலும் இந்தியாவை தோல்வியுறச் செய்ததன் மூலமாக, 6வது முறையாக ஆஸ்திரேலியா அணி உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.
இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பின்னர் இந்திய அணியின் வீரர்களும் இந்திய அணியின் ரசிகர்களும் மனமுடைந்து காணப்பட்டனர். இந்திய அணியின் முக்கிய வீரர்களான சிராஜ், விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்டோரியின் கண்கள் குளமாவதை யாராலும் தடுக்க முடியவில்லை. அந்த நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களும் உணர்ச்சிவசப்பட்டனர்.
இதற்கு நடுவே இந்தியன் தோல்வியடைந்ததற்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடி இந்திய அணியின் வீரர்களை ஊக்கப்படுத்துவதற்காக ட்ரெஸ்ஸிங் அறைக்கு வருகை தந்தார். மேலும் அவர் இந்திய அணியின் வீரர் முகமது ஷமியை கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ஜடேஜா உள்ளிட்ட மற்ற வீரர்களையும் சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்து, ஊக்கப்படுத்தியிருக்கிறார். மேலும் இதுகுறித்த புகைப்படங்களை முகமது ஷமி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை வெளியிட்டதோடு துரதிஷ்டவசமாக நேற்று எங்கள் நாளல்ல போட்டி முழுவதும் எங்கள் அணிக்கும், எனக்கும் ஆதரவாக இருந்த அனைத்து இந்திய ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
குறிப்பாக டிரெஸ்ஸிங் அறைக்கு வந்து எங்களை ஊக்கப்படுத்திய பிரதமருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் திரும்புவோம் என்று பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இதேபோல இந்திய அணியின் வீரர் ரவீந்திர ஜடேஜா வெளியிட்டுள்ள பதிவில் எங்கள் போட்டி மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால் நேற்று நாங்கள் தோல்வியடைந்தோம், நாங்கள் அனைவரும் சோகமாக இருக்கிறோம். ஆனால்,மக்கள் ஆதரவு எங்களை ஊக்கப்படுத்துகிறது. பிரதமர் டிரெஸ்ஸிங் அறைக்கு வந்தது சிறப்பானது. மற்றும் மிகவும் உத்வேகம் அளித்தது என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஸ்ரேயாஸ் ஐயர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், எங்கள் இதயங்கள் உடைந்து விட்டன. அது இன்னும் அமைதியடையவில்லை. சிறிது நேரம் ஆகாது. இது எனக்கு நிறைய கற்றுக் கொடுத்த முதல் உலகக் கோப்பை. ஆரம்பம் முதல் இறுதி வரை எங்களுக்கு ஆதரவளித்த பிசிசிஐ அணி நிர்வாகம், துணை ஊழியர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி ஒட்டுமொத்த ஆஸ்திரேலியா அணியும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.