இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க புதிய கல்வி கொள்கை அவசியம்.. பிரதமர் மோடி உரை.
Modi speak about puthiya kalvi kolkai
நாட்டில் கல்வித் துறையில் மாற்றங்களைக் கொண்டுவரும் வகையில், புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ், உயர்கல்வியில் மாற்றத்துக்கான சீர்திருத்தங்கள் என்ற மாநாடு டெல்லியில் தற்போது நடைப்பெற்று வருகிறது.
மத்திய கல்வி அமைச்சகம், பல்கலைக் கழக மானியக் குழு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உறையாற்றி வருகிறார். அந்த உறையில் முழுமையான கல்வி என்பதே தற்போதைய தேவை அதற்காகவே புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் பாடத்திட்டங்களை மாற்றுவதற்கு மாணவர்களுக்கு தற்போது சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. புதிய மாற்றத்தை அனைவரும் ஏற்று கொள்ள தயாராக வேண்டும். புதிய கல்வி கொள்கையில் எந்த வித பாகுபாடும் இல்லை. அனைத்து தரப்பு கருத்தையும் கேட்டபிறகே புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
மேலும் தாய்மொழியிலேயே கல்வி கற்பது மூலம் மாணவர்கள் சிறப்பாக கற்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.புதிய கல்வி கொள்கை மூலம் கல்வி முறை வலுப்பெறும். நமது கல்வி முறை சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும். பாதியில் படிப்பை நிறுத்தியவர்கள் புதிய கல்விக் கொள்கையால் படிப்பை தொடரலாம். மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்த தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.