புதிய கல்வி கொள்கை கருத்தரங்கில் பிரதமர் மோடியின் உரை! என்ன பேசினார் தெரியுமா?
modi talk about new education policy
புதிய கல்விக் கொள்கை குறித்த அறிவிப்பை மத்திய அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்சியினர், புதிய கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல அம்சங்களுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த கல்வி கொள்கைக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதில், 5ம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த புதிய கல்வி கொள்கையில், உயர் கல்வியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களை விளக்கும் நிகழ்ச்சிக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பல்கலை மானிய குழு ஆகியவை இன்று ஏற்பாடு செய்து உள்ளன.
இந்த கருத்தரங்கில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் இன்று பகல் 11 மணியில் இருந்து உரையாற்றுகிறார் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், இணை அமைச்சர் சஞ்சய் தோட்ரே உள்ளிட்டோர் இந்த கருத்தரங்கில் பங்கேற்கின்றனர்.
அதில் பேசிய மோடி, தேசிய கல்வி கொள்கை என்பது ஒரு மகிழ்ச்சியான விஷயம். இந்த மாற்றத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பழைய கல்விக் கொள்கையால் எதிர்பார்த்த அளவு பலன் கிடைக்கவில்லை. மேலும், தேசிய கல்விக் கொள்கையில் எந்த பாகுபாடும் இல்லை. பல ஆண்டுகளாக நடத்திய விரிவான கலந்துரையாடல்கள் மற்றும் லட்சக்கணக்கான பரிந்துரைகள் குறித்து விவாதித்த பின்னரே முடிவெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.