கொரோனா அச்சுறுத்தல்: பிரதமர் மோடியின் திடீர் ஆலோசனை! மோடி எடுத்துவரும் முக்கிய நடவடிக்கைகள்!
modi talk with former pm
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துவந்த நிலையில், மத்திய அரசு கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஊரடங்கை கடைபிடித்து வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல் ஆகியோருடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
இதேபோன்று முன்னாள் பிரதமர்களான மன்மோகன் சிங், தேவகவுடா ஆகியோருடனும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடனும் கலந்து பிரதமர் ஆலோசித்தார். இந்த நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று காணொளிக் காட்சி மூலம் நடைபெறுகிறது. அதில் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.