இரண்டு நாட்கள் இந்திய பயணம் மேற்கொள்ள விருக்கும் அமெரிக்க அதிபர்! இந்த சந்திப்பின் நோக்கம் என்ன தெரியுமா?
Modi trump
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவரும் வருகின்ற 24 மற்றும் 25 ஆகிய இரு தேதிகளில் இந்தியாவில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர் என வெள்ளை மாளிகை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த சந்திப்பில் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதற்காக இந்த பயணத்தை இரு நாட்டு அதிபர்களும் மேற்கொள்ளவிருக்கின்றனர்.
மேலும் இந்த அறிவிப்பானது கடந்த வாரம் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி இருவரும் தொலைபேசி வழியே பேசி கொண்டனர் என்றும் வெள்ளை மாளிகையிலிருந்து தகவல் தெரிவித்து உள்ளது.
இந்தியா வரும் டிரம்ப் மற்றும் மோடி இருவரும் இணைந்து புதுடெல்லி மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர். இதில் நாட்டு விடுதலைக்காக போராடிய மகாத்மா காந்தி மற்றும் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்ற வகையில் இவர்களது பயணத்தில் குஜராத் இடம்பெற்றுள்ளது.