ஆட்டிப்படைக்கும் கொரோனா! இந்தியாவுடன் இணையும் அமெரிக்கா! பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்!
Modi tweet about discussion with trump
சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 190 நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்த கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இத்தகைய கொடூர கொரோனா வைரஸால் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவிய நிலையில், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் பல நாடுகளும் பெரும் பீதியில் உள்ளது.
மேலும் இந்தியாவிலும் கொரோனா பரவிய நிலையில் 3,376 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 79 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசனை செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் கொரோனா குறித்து தொலைபேசியில் நீண்ட நேர உரையாடலை மேற்கொண்டேன். மிக சிறந்த ஆலோசனைகளை கலந்துரையாடினோம். மேலும் கொரோனா வைரஸுக்கு எதிராக அமெரிக்காவும், இந்தியாவும் முழுமையான பலத்துடன் ஒன்றாக இணைந்து போராடுவோம் எனவும் ஒப்புக்கொண்டோம் தெரிவித்துள்ளார்.